திமுகவின் ஆர்ப்பாட்ட தில்லுமுல்லு... பள்ளி மாணவர்களை அழைத்து வந்த கொடுமை...

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு என்ற பெயரால் திமுக நடத்திய மும்மொழிக் கொள்கைக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில், கொரடாச்சேரி அரசு பள்ளி மாணவ மாணவியர்களை வலுகட்டாயமாக திமுக நிர்வாகிகள் அழைத்து வந்ததாக புகார் எழுந்துள்ளது. அதிகரித்து வரும் பாலியல் குற்றங்களையும், சட்டம் ஒழுங்கு சீர்குலைவையும் மறைக்கவே, மும்மொழிக் கொள்கைக்கு எதிரான போராட்டத்தை விளம்பர திமுக அரசு கையில் எடுப்பதாக சமூக ஆர்வலர்கள குற்றம் சாட்டியுள்ளனர். 

தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மற்றும் பொது வெளியில் பாலியல் குற்றங்கள், இளைஞர்களை குறிவைத்து அமோகமாக நடைபெறும் போதைப்பொருட்கள் விற்பனை, சட்டம் ஒழுங்கு சீர்குலைவு போன்ற பல்வேறு பிரச்னைகள் தொடர் கதையாகி வருகின்றன. ஆனால் அதனைத் தடுக்க நடவடிக்கை எடுக்காமல், மக்களை  திசை திருப்பும் வகையில், விளம்பர திமுக அரசு மும்மொழி கொள்கைக்கு எதிரான போராட்டத்தை கையில் எடுத்துள்ளது. இதற்கு துணையாக மாணவ சமுதாயத்தை தூண்டிவிட்டு அரசியல் ஆதாயம் தேடும் நடவடிக்கையில் இறங்கியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அந்த வகையில் திருவாரூரில் மாணவ இயக்கங்களின் கூட்டமைப்பு என்ற பெயரால், ரயில் நிலையம் முன்பு திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்திற்காக திமுக நிர்வாகிகள், கொரடாச்சேரி  அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவ மாணவியர்கள் மற்றும் திருவாரூரில் உள்ள தனியார் பள்ளியில் பயிலும் மாணவ மாணவியர்களை, அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களை மிரட்டி, அழைத்து வந்து அத்துமீறல்களில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. 

வலுக்கட்டாயமாக வாகனங்களில் ஏற்றி, மாணவ மாணவியர்களை திருவாரூருக்கு அழைத்து வந்த திமுக நிர்வாகிகள், மாணவ மாணவிகளின் பள்ளி சீருடை மீது ஸ்டாலின் உருவம் பொறித்த பனியனை அணியச் செய்து, மத்திய அரசுக்கு எதிராக கோஷம் போட வைத்துள்ளனர்.

திமுக நிர்வாகிகளின் இந்த அராஜகத்தை தட்டிகேட்கும் வகையில், பாஜகவின் திருவாரூர் மாவட்ட துணைத்தலைவர் சதா சதீஸ், கொரடாச்சேரி பள்ளி தலைமையாசிரியர் பாலகிருஷ்ணனிடம் விளக்கம் கேட்டு பேசிய ஆடியோ தற்போது வெளியாகியுள்ளது.

மேலும் மாணவ கூட்டமைப்பு என்ற பெயரில் திமுக நடத்திய இந்த நாடகத்தில், கூட்டணி கட்சிகளான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பு இந்திய மாணவர் சங்கம், இந்திய கம்யூனிஸ்ட் சார்பு அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் ஆகியவற்றின் மாநில நிர்வாகிகளை மேடை மீது ஏற்ற திமுகவினர் முன்வராததால் கடும் அதிருப்தி அடைந்தனர்.

திமுகவினரின் இத்தகைய போக்கை கண்டித்து இந்திய மாணவர் சங்கத்தை சேர்ந்த மாணவ அமைப்பினர் நடுச்சாலையில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த திருவாரூர் டிஎஸ்பி. மணிகண்டன், இந்திய மாணவ சங்க நிர்வாகிகளை மிரட்டி கலைந்துபோக சொன்னபோது,  திமுகவினர் நடுரோட்டில் மேடைபோட மட்டும் எப்படி அனுமதி கொடுத்தீர்கள் என அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

Night
Day