திமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் எதுவுமே முழுமையாக இன்னும் நிறைவேற்றப்படவில்லை - நயினார் நாகேந்திரன்

எழுத்தின் அளவு: அ+ அ-

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை அன்பு நகர் பகுதியில் உள்ள தனது வீட்டில் நெல்லை பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் கருப்பு கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது திமுக அரசை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். இந்த போராட்டத்தில் பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன், தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளை மறைப்பதற்காக இதுபோன்ற தொகுதி மறுசீரைமப்பு கூட்டம் என்ற பெயரில் திமுக மக்களை ஏமாற்றி வருவதாக குற்றஞ்சாட்டினார்.

Night
Day