திமுகவுக்கு 2026 தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள் - புரட்சித்தாய் சின்னம்மா எச்சரிக்கை

எழுத்தின் அளவு: அ+ அ-

திமுக ஆட்சியில், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலுமாக சீர்குலைந்துவிட்டதாகவும், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும்,  கொலை, கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகவும் அஇஅதிமுக பொதுச் செயலாளர்  புரட்சித்தாய் சின்னம்மா குற்றம் சாட்டியுள்ளார்.

திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி  திருக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக, அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா, தூத்துக்குடி சென்றார். தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த புரட்சித்தாய் சின்னம்மாவிடம் தற்போதைய அரசியல் சூழ்நிலைகள் குறித்து, செய்தியாளர்கள் கேட்டனர். வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில்  இதுபற்றி தெரியவரும்  என்று புரட்சித்தாய் சின்னம்மா பதிலளித்தார். 

திமுக ஆட்சியில், தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு முற்றிலுமாக   சீர்குலைந்துவிட்டதாகவும், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும்,  கொலை, கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகவும் புரட்சித்தாய் சின்னம்மா குற்றம் சாட்டினார்.

Night
Day