திமுகவைக் கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்

எழுத்தின் அளவு: அ+ அ-

விழுப்புரம் மாவட்டம் சத்தியமங்கலத்தில் வெள்ள நிவாரணம் வழங்காத திமுக அரசை கண்டித்து 200க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். 

கடந்த 30ஆம் தேதி ஃபெஞ்சல் புயல் கரையை கடந்தபோது மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு ஆயிரக்கணக்கான வீடுகளும், பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களும் பாதிக்கப்பட்டது. இதனிடையே பாதிக்கப்பட்ட குடும்ப அட்டைத்தாரர்களுக்கு தலா 2 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்த நிலையில், சொக்கநந்தல், களத்தம்பட்டு கிராமங்களில் நிவாரண நிதி கிடைக்காததால் 200க்கும் மேற்பட்டோர் திமுக அரசை கண்டித்து சத்தியமங்கலத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர். 

Night
Day