திமுக அமைச்சர்களுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கு - உச்சநீதிமன்றம் அதிரடி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன் வந்து எடுத்துக் கொண்ட வழக்குகளில் இன்னும் எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படாத போது, உங்களுக்கு என்ன பிரச்சனை என திமுக அமைச்சர்களை உச்சநீதிமன்றம் கடிந்து கொண்டுள்ளது.

கடந்த திமுக ஆட்சியில் அமைச்சர்களாக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தங்கம்தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் உள்ளிட்டோர் மீது 2012ஆம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்குகளில் இருந்து அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டனர். இருவர் மீதான வழக்கை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டார். இந்நிலையில் இந்த வழக்குகள் கடந்த ஜனவரி 9-ந் தேதியன்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்குகள் மீதான இறுதிகட்ட விசாரணை வரும் பிப்ரவரி 5ம் தேதி நடைபெறும் என நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் உத்தரவிட்டார். இதற்கிடையே இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிப்பதை எதிர்த்து அமைச்சர்கள் மற்றும் அவர்களது மனைவியர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, வழக்கு தொடர்பாக எந்த உத்தரவும் இன்னும் பிறப்பிக்கப்படவில்லை என்றும் அப்படி இருக்கும் போது என்ன பிரச்சனை என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இந்த வழக்கை, எந்த நீதிபதி விசாரிக்க வேண்டும் என்பதை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முடிவு செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் கூறியது. நீதிபதியை இறுதி செய்த பின்னர் வழக்கு விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், திமுக அமைச்சர்களுக்கு எதிரான வழக்குகளை நாளை மறுநாள் தள்ளிவைப்பதாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டுள்ளார். 

Night
Day