திமுக அரசுக்கு 2026ல் முடிவுரை எழுதப்படுவது உறுதி - அண்ணாமலை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

விளம்பர திமுக அரசுக்கு 2026ல் முடிவுரை எழுதப்படுவது உறுதி என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். ராமநாதபுரத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக அரசு மீது மக்கள் கடுமையான அதிருப்தியில் இருப்பதாக தெரிவித்தார். அது தெரியாமல் முதலமைச்சர் ஆட்சி நடத்திக் கொண்டிருப்பதாக சாடிய அண்ணாமலை, நாகை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தூத்துக்குடி மாவட்ட மீனவர்களுடன் வெளியுறவுத்துறை அமைச்சரை சந்தித்து மீனவர் பிரச்னை குறித்து பேச இருப்பதாக தெரிவித்தார். தொகுதி மறு சீரமைப்பு விவகாரத்தில் எவ்வளவோ விளக்கம் அளித்த பிறகும் தேவையின்றி திமுக அரசியல் செய்து வருவதாகவும் அண்ணாமலை குற்றம் சாட்டினார். 

Night
Day