திமுக அரசு ஆன்மீகத்திற்கும், கடவுளுக்கும் எதிரான அரசு : அண்ணாமலை குற்றச்சாட்டு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திமுக அரசு ஆன்மீகத்திற்கும், கடவுளுக்கும் எதிரான அரசு என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார். 

சென்னை, அமைந்தகரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பிப்ரவரி 25 ஆம் தேதி திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நிறைவு பெறும் என் மண் என் மக்கள் யாத்திரையில் பிரதமர் மோடி கலந்து கொள்ள உள்ளதாக தெரிவித்தார். யாரெல்லாம் பிரதமர் மோடியை ஏற்றுக்கொள்கிறார்களோ, அவர்கள் எல்லாம் பாஜக கூட்டணில் சேரலாம் எனவும் தெரிவித்தார். கற்றல் அறிவு குறைவாக உள்ளவர்கள் திமுக என்பதற்கு உதயநிதிதான் உதாரணம் எனத் தெரிவித்த அவர், சங்கராச்சாரியார்கள் மீது உதயநிதிக்கு திடீர் அக்கறை உண்டாகுமானால் ஏன் தமிழக கோயில் கும்பாபிஷேகத்திற்கு சங்கராச்சாரியர்களுக்கு அழைப்பு விடுப்பதில்லை? என கேள்வி எழுப்பினார்.

Night
Day