திமுக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது - அண்ணாமலை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பட்டப்பகலில் அரங்கேறும் கொலைகளால் தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு நாசமானது வெட்ட வெளிச்சமாகியிருப்பது அப்பட்டமாக தெரிவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

தஞ்சையில் பட்டப்பகலில் பள்ளி வகுப்பறையில் வைத்து ஆசிரியை படுகொலை செய்யப்பட்டதற்கு அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதேபோன்று, கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் பட்டப்பகலில் வழக்கறிஞர் ஒருவர் சரமாரியாக வெட்டப்பட்டுள்ள சம்பவத்திற்கும் அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார். திமுக ஆட்சியில் சட்டம் - ஒழுங்கு சீர்கெட்டதை இந்த தொடர் கொலைகள் காட்டுவதாக அண்ணாமலை தெரிவித்தார். 

Night
Day