திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை - நடிகை குஷ்பு குற்றச்சாட்டு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரும், நடிகையுமான குஷ்பு  குற்றம் சாட்டியுள்ளார். சென்னை சிந்தாரிப்பேட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக ஆட்சியில் பெண்களுக்கு எந்த பாதுகாப்பும் இல்லை என்றும், திமுக எம்.எல்.ஏ கருணாநிதியின் மகன் வீட்டிலேயே ஒரு சிறுமிக்கு மிகப்பெரிய கொடுமை நேர்ந்துள்ளது அதிர்ச்சியளிப்பதாகவும் கூறினார். பெண்களுக்கு ஆதரவாக முதலமைச்சர் ஸ்டாலின் பேசியதை ஒருபோதும் பார்த்ததில்லை என்றும் கூறினார்.

Night
Day