திமுக ஆட்சியில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை - புரட்சித்தாய் சின்னம்மா குற்றச்சாட்டு

எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகத்தை பின்னுக்கு தள்ளியதே திமுக அரசின் சாதனை என்று குற்றம் சாட்டியுள்ள அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா, ஆட்சி செய்வதற்கு மாறாக திமுக அரசியல் செய்வதாக விமர்சித்துள்ளார்.

சென்னை மெரினாவில் உள்ள பேரறிஞர் அண்ணா நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தியப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த புரட்சித்தாய் சின்னம்மா, மத்திய பட்ஜெட்டில் சில வரவேற்கத்தக்கது சிலவற்றை பரிசீலினை செய்ய வேண்டும் என தெரிவித்தார். அண்ணா பல்கலைக் கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் பத்திரிகையாளர்கள் மீது எதற்காக நடவடிக்கை கேள்வி எழுப்பிய புரட்சித்தாய் சின்னம்மா, வேங்கைவயல் விவகாரத்தில் திமுக அரசு உண்மையை மூடி மறைப்பதாக குற்றம் சாட்டினார். மாண்புமிகு அம்மா ஆட்சியில் 2வது இடத்தில் இருந்த தமிழகம் தற்போது 3வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் புரட்சித்தாய் சின்னம்மா குற்றம் சாட்டினார்.

அனைத்து துறைகளையும் தனியார்மயமாக்க திமுக அரசு துடிப்பதாக குற்றம் சாட்டிய புரட்சித்தாய் சின்னம்மா, தமிகத்தை பின்னுக்கு தள்ளியதே திமுக அரசின் சாதனை என விமர்சித்தார். காலை சிற்றுண்டி திட்டத்தை தனியாரிடம் ஒப்படைக்க திமுக அரசு துடிப்பதாகவும், மத்திய அரசின் திட்டங்களை திமுக அரசு சரிவர செயல்படுத்துவதில்லை என்றும் அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா குற்றம் சாட்டினார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய புரட்சித்தாய் சின்னம்மா,  ஆட்சி செய்வதற்கு பதிலாக திமுக அரசியல் செய்து வருவதாக குற்றம் சாட்டினார். விஸ்வகர்ம திட்டதை குல தொழில் என பழி சுமத்தி மத்திய அரசிடம் இருந்து நிதியை வாங்க திமுக அரசு மறுப்பதாக புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்தார். 

அரசு துறைகளில் காலிப்பணியிடங்களை நிரப்ப திமுக அரசு எந்த நடிக்கையும் எடுக்கவில்லை என்றும், அண்ணா பல்கலை கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் குற்றவாளிகளை காப்பாற்ற வழக்கை திமுக அரசு திசை திருப்புவதாக குற்றம் சாட்டிய புரட்சித்தாய் சின்னம்மா, ஏடிஜிபி கல்பனா நாயக் விவகாரத்தில் திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் சாடினார்.

திமுக-வைப் போல் யாராலும் அறிவிப்புகளை வெளியிட முடியாது என்று விமர்சித்த புரட்சித்தாய் சின்னம்மா, திமுகவினருக்கு நெருக்கமானவர்கள் நிலத்தை வாங்கி வைத்துள்ளதால் பரந்தூர் விமான நிலைய திட்டத்தை செயல்படுத்த திமுக அரசு துடிப்பதாக புகார் கூறினார். வேலைவாய்ப்பு இல்லை, மக்கள் மீது வரி சுமை ஆகியவையே திமுக அரசின் சாதனை என்று விமர்சித்த புரட்சித்தாய் சின்னம்மா, பேரறிஞர் அண்ணாவின் வழியில் நல்லாட்சி மலரும் என்றும் உறுதிபடத் தெரிவித்தார்.


Night
Day