எழுத்தின் அளவு: அ+ அ- அ
அரசியல் கட்சியில் தனி நபரின் அதிகாரமோ, குடும்ப ஆதிக்கமோ இருக்கக்கூடாது, எந்த ஒரு முடிவையும் எடுக்கும் அதிகாரம் கட்சித் தொண்டர்களுக்குத்தான் வழங்கப்பட வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு, அஇஅதிமுக சட்டதிட்டங்களை வகுத்தவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். என, அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா புகழாரம் சூட்டியுள்ளார். அஇஅதிமுகவில் அனைவரும் ஒன்றுபட்டு, புரட்சித்தலைவர் மற்றும் புரட்சித்தலைவி அம்மா வழியில் ஒருங்கிணைந்து செயல்பட்டால்தான் திமுக என்ற தீய சக்தியை வேரறுக்க முடியும் என்றும் சின்னம்மா உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
Roll Visual
புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். பிறந்த நாளை முன்னிட்டு, அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திய, அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா, பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். திரைப்படத் துறையிலும், அரசியலிலும் சமூக சீர்திருத்தக் கருத்துகளை எடுத்துரைத்த புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., மக்கள் நலனுக்காகவே அரும்பாடுபட்டவர் என புரட்சித்தாய் சின்னம்மா புகழாரம் சூட்டினார்.
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். உருவாக்கிய, மாபெரும் மக்கள் இயக்கமாகிய அஇஅதிமுக-வை அவரது வழியில் கட்டிக்காத்த புரட்சித் தலைவி அம்மா, மக்கள் நலனுக்காகசெயல்படுத்திய திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்துவதே தனது லட்சியம் என்று புரட்சித்தாய் சின்னம்மா உறுதிபடத் தெரிவித்தார்.
தமிழக மக்களை ஏமாற்றி, தேர்தலில் வாக்குகளைப் பெறுவதற்காகவே, தேர்தல் அறிக்கையில் பொய்யான வாக்குறுதிகளை அள்ளி வீசிய திமுக-வுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்று புரட்சித்தாய் சின்னம்மா எச்சரித்தார்.
வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் புரட்சித் தலைவி அம்மா காலத்தில் எவ்வளவு சிறப்பாக நடைபெற்றன என்பதை விளக்கிய புரட்சித்தாய் சின்னம்மா, தற்போது திமுக-வினர் வரம்பு மீறி தலையிட்டு ஜல்லிக்கட்டில் அரசியலைப் புகுத்திவிட்டதாக குற்றம் சாட்டினார். திமுகவினர் அண்மையில் சென்னையில் நடத்திய சினிமா விழா பற்றியும் அவர் கடுமையாக விமர்சித்தார்.
திமுக அரசின் குறைகளை சுட்டிக்காட்டும் ஊடகங்கள், பழிவாங்கப்படுவதாக புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்தார்.
அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படுவது வரவேற்கத் தக்கது என்றும், புரட்சித் தலைவி அம்மாவும் இதே கருத்தை தெரிவித்திருப்பதாகவும் புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டார்.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம், உரிய முன்னேற்பாடுகள் மற்றும் போதிய வசதிகள் இன்றி அவசர கதியில் திறக்கப்பட்டதாகவும், இதனால், பொதுமக்கள் மிகுந்த இன்னலுக்கு ஆளாகி வருவதாகவும் கழகப் பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா குற்றம் சாட்டினார்.
திமுக அரசின் புயல் நிவாரண உதவித் தொகை, பொங்கல் பரிசுத் தொகுப்பு ஆகியவற்றில் முறைகேடுகள் பெருமளவில் நடைபெற்றதாக புரட்சித்தாய் சின்னம்மா குற்றம் சாட்டினார்.
அஇஅதிமுக-வில் அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்றும், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகிய இருபெரும் தலைவர்களின் வழியில் அனைவரும் இணைந்து செயல்பட்டால்தான், திமுக என்ற தீய சக்தியை வேரறுக்க முடியும் என்றும் புரட்சித்தாய் சின்னம்மா உறுதிபடத் தெரிவித்தார்.
திமுக அரசின் தவறுகளையும், வேறு பல பிரச்னைகளையும் மறைக்கவே தேவையற்ற சர்ச்சைகளை திமுகவினர் எழுப்பி வருவதாக புரட்சித்தாய் சின்னம்மா குற்றம் சாட்டினார்.
மத்திய அரசுடன் மோதல் போக்கை கடைபிடிக்காமல், தமிழக மக்கள் நலனுக்காக, போதிய நிதியையும், மற்ற உதவிகளையும், திமுக அரசு, முறைப்படி கேட்டுப் பெறவேண்டும் என புரட்சித்தாய் சின்னம்மா வலியுறுத்தினார்.