திமுக எம்.எல்.ஏ. மகள் மருமகன் ஜாமீன் கோரிய வழக்கு ஒத்திவைப்பு : பாதிக்கப்பட்ட சிறுமி தரப்பில் பதிலளிக்க அவகாசம் தந்த உயர்நீதிமன்றம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பணிப்பெண்ணை கொடுமைப்படுத்திய விவகாரத்தில் கைதான பல்லாவரம் திமுக எம்.எல்.ஏ. கருணாநிதியின், மகன், மருமகள் ஜாமீன் கோரிய வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமி பதிலளிக்க உயர்நீதிமன்றம் அவகாசம் அளித்துள்ளது. திமுக எம்.எல்.ஏ. கருணாநிதியின் மகனான ஆண்டோ மதிவாணன், மருமகள் மெர்லினா ஆன் ஆகியோர் வீட்டு பணிப்பெண்ணாக பணியாற்றிய சிறுமியை கொடுமைப்படுத்தியதாக கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் ஜாமீன் கோரி இருவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனு மீது இன்று நடைபெற்ற விசாரணையில், மனுதாரர்கள் தரப்பில் தவறான புகாரில் கைதான இருவரும் 30 நாட்களாக சிறையில் இருப்பதாக வாதிடப்பட்டது. இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண் தரப்பில் ஜாமீன் மனு குறித்து பதிலளிக்க அவகாசம் கேட்கப்பட்டது. இதனை ஏற்ற நீதிபதி, பதிலளிக்க அவகாசம் வழங்கி ஜாமீன் மனு மீதான விசாரணையை வரும் 23ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Night
Day