எழுத்தின் அளவு: அ+ அ- அ
கன்னியாகுமரி மாவட்டம் ஆற்றூர் பேரூராட்சியில் போலி ஆவணம் மூலம் வங்கியில் வீட்டுகடன் பெறும் முயற்சியில் ஈடுபட்ட திமுக கவுன்சிலர் மீது வழக்குபதிவு செய்து காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் தேமானூர் பகுதியை சேர்ந்தவர் சிவன் என்கிற செல்வன். இவர் ஆற்றூர் பேரூராட்சி 13 வார்டு கவுசிலராகவும் திட்ட குழு உறுப்பினராகவும் உள்ளார். திமுக மாவட்ட மாணவர் அணி துணை செயலாளராகவும் உள்ளார். இவர் வீடு கட்டுவதற்காக தனியார் வங்கியில் கடனுக்கு விண்ணப்பித்து இருந்தார். அந்த விண்ணப்பத்தோடு சமர்ப்பித்த ஆவணங்களோடு வீட்டிற்கு செல்லும் பாதை பஞ்சாயத்து பாதை என காட்டியிருந்தார். இந்த ஆவணங்களில் பேருராட்சி செயல் அலுவலர் கையொப்பம் , சீல் ஆகியவை போலி என கண்டுபிடிக்கப்பட்டு ஆற்றூர் பேருராட்சி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் செயல் அலுவலர் சைனி பிரியாவின் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த திருவட்டார் காவல்நிலைய போலீசார், திமுக பிரமுகர் செல்வனை தேடி வருகின்றனர். இவர் மீது போலி ஆவணங்கள் தயாரித்து அரசு வேலை நியமன ஆணை வழங்கி ஒன்பது பேரிடம் ஒரு கோடியே பதினைந்து லட்ச ரூபாய் ஏமாற்றியதாக வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடதக்கது. இவர் மீது மேலும் பல மோசடி புகார்கள் குவிந்து வருகின்றன.