திமுக கொடி கம்பம் விழுந்ததில் இளைஞர் உயிரிழப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

விளம்பர திமுக அரசின் முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாள் விழாவிற்காக திமுக-வினர் அத்துமீறி வைத்திருந்த கொடி கம்பம் விழுந்து, இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

சென்னை திருமங்கலம் அருகே உள்ள கலெக்டர் நகர் பகுதியில் நேற்று நடைபெற்ற முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாள் விழாவிற்காக திருமங்கலம், முகப்பேர் சாலையில் திமுக கொடி கம்பங்கள் வைக்கப்பட்டிருந்தன. இந்த கம்பங்கள் முறையாக அமைக்கப்படாததால், சாலை வழியாக இருசக்கர வாகனங்களில் சென்ற இளைஞர் தனுஷ் மற்றும் தம்பதியினர் ஆகியோர் மீது கொடி கம்பம் சாய்ந்து விழுந்ததில், அவர்கள் அடுத்தடுத்து நிலைதமாறி கீழே விழுந்தனர். இந்த விபத்தில் படுகாயமடைந்த தனுஷை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த தம்பதியினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். விளம்பர திமுக-வினரின் அத்துமீறல் மற்றும் அடாவடியால் அப்பாவி இளைஞர் ஒருவரின் உயிர் பறிபோயிருப்பது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Night
Day