திமுக கொண்டு வந்த தீர்மானத்திற்கு பேரவையில் பா.ஜ.க. எதிர்ப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஒரே நாடு ஒரே தேர்தலுக்கான எதிரான தீர்மானத்தை பாஜக கடுமையாக எதிர்த்துள்ளது. சட்டப்பேரவையில் இன்று ஒரே நாடு ஒரே தேர்தலை எதிர்த்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்தார். அந்த தீர்மானத்தின் மீது பேசிய பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், அடுத்த மூன்று மாதத்தில் நாடாளுமன்ற தேர்தல் இருப்பதால், மக்களுக்கு மாநில அரசுகள் எந்த திட்டத்தையும் செய்ய முடியாத சூழல் இருக்கும். ஆகையால் தான் ஒரே நாடு ஒரே தேர்தல் என்றும், இதனை சீர் திருத்தமாக பார்க்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். திமுக கொண்டு வந்த தீர்மானத்தை பாஜக எதிர்ப்பதாகவும் வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

Night
Day