திமுக நிர்வாகியை ஓட ஓட விரட்டி சென்று விசிக நிர்வாகி தாக்கியதால் பரபரப்பு..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கன்னியாகுமரியில் முதலமைச்சர் குறித்து விமர்சித்ததை தட்டிக்கேட்ட திமுக நிர்வாகி மீது விசிகவினர் தாக்குதல் நடத்திய சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கன்னியாகுமரியில் அருமனை நெடுங்குளம் சந்திப்பில் நின்று கொண்டு முதலமைச்சர் குறித்து விசிக மாநில செயலாளர் ஸ்டீபன் விமர்சித்ததாகக் கூறப்படுகிறது. இதனை திமுக நிர்வாகி பிரபு தட்டிக்கேட்டதால் ஆத்திரமடைந்த ஸ்டீபன், தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து திமுக நிர்வாகியை ஓட ஓட விரட்டி சென்று தாக்கி, செல்போனை பறித்துள்ளார்.

இதில் படுகாயமடைந்த பிரபு குழித்துறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தன்னை தாக்கிய ஸ்டீபன் மீது காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், போலீசாரை தனது கைக்குள் வைத்துக் கொண்டு விசிக நிர்வாகி தப்பிக்க வாய்ப்புள்ளதாகவும் பிரபு தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஏற்கனவே ஸ்டீபன் மீது பாலியல் உள்பட பல வழக்குகள் நிலுவையில் இருப்பதும், சிறையில் விசாரணை கைதியாக இருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Night
Day