திமுக-பொதுக்கூட்டத்தில்-காலி-சேர்களை-பார்த்து-உரையாற்றும்-நிலைக்கு-தள்ளப்பட்டார்-எம்.பி.திருச்சி-சிவா..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மயிலாடுதுறை மாவட்டம் மங்கைநல்லூரில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் எம்.பி. திருச்சி சிவா காலி சேர்களை பார்த்து உரையாற்றியது திமுகவினருக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 72-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மாவட்ட செயலாளர் நிவேதா முருகன் எம்.எல்.ஏ தலைமையில் நடைபெற்றது. இதில், திருச்சி சிவா பேச்சை கேட்க ஆயிரகணக்கில் மக்கள் வருவார்கள் என எதிர்ப்பார்த்த திமுகவினருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. திமுக ஆட்சியின் சாதனைகளை குறித்து திருச்சி சிவா பேச ஆரம்பித்ததும் முன்வரிசையில் உட்கார்திருந்த பெண்கள் எழுந்து வெளியேறிய நிலையில், அவர்களை அமர வைப்பதற்காக உடன்பிறப்புகள் எடுத்த அனைத்து முயற்சிகளும் வீணாகின. 

இறுதியில் காலி சேர்களை பார்த்து உரையாற்ற வேண்டிய கட்டாயத்திற்கு எம்.பி.திருச்சி சிவா தள்ளப்பட்டார். இவ்வளவு பெரிய பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்துவிட்டு அதற்கு மின்சாரம் பெற ஜெனரேட்டர் செலவை கணக்கு போட்டு பார்த்த உடன்பிறப்புகள் பொதுக்கூட்டம் நடைபெற்ற இடத்திற்கு அருகில் இருந்த மின்கம்பங்களில் இருந்து கொக்கி போட்டு மின்சாரத்தை எடுத்து அதனையும் 

Night
Day