திமுக மாவட்ட செயலாளர் ஆணவப் பேச்சு

எழுத்தின் அளவு: அ+ அ-

புதிதாக நியமிக்கப்பட்ட தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளரின் ஆணவப் பேச்சின் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தருமபுரி மாவட்டத்தில் கிழக்கு மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்பிரமணி மீது உள்ள அதிருப்தியால் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து விடுவித்து புதிய கிழக்கு மாவட்ட செயலாளராக தர்மசெல்வன் நியமிக்கப்பட்டார். மக்கள் மத்தியில் அதிகம் அறிமுகம் இல்லாத தர்மசெல்வன் ஏற்கனவே பாட்டாளி மக்கள் கட்சியில் இருந்து திமுகவுக்கு வந்ததாக கூறப்படுகிறது. 

இந்நிலையில், நேற்று நடைபெற்ற திமுக செயற்குழுக் கூட்டத்தில் பேசிய தர்மசெல்வன்,  மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்.பி உள்ளிட்ட அனைவரும் தன்னுடைய பேச்சைதான் கேட்க வேண்டும் என்றும் இல்லை என்றால் மாற்றி விடுவேன் என மிரட்டும் தொனியில் பேசியுள்ளார். கிழக்கு மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்ட ஒருசில நாட்களிலேயே தர்மசெல்வன் ஆணவப்போக்கும் மிரட்டும் தொனியில் பேசிய ஆடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Night
Day