திருச்சி என்.ஐ.டி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை : ஒப்பந்த ஊழியர் கைது

எழுத்தின் அளவு: அ+ அ-

திருச்சி என்.ஐ.டி-யில் மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த ஒப்பந்த ஊழியரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மாணவிகளை தரக்குறைவாக பேசிய வார்டனும் மன்னிப்பு கேட்டதால் மாணவர்களின் தொடர் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

திருவெறும்பூர் அருகே செயல்பட்டு வரும் என்.ஐ.டி-யில் ஏராளமான மாணவ, மாணவிகள் விடுதியில் தங்கி படித்து வருகின்றனர். இந்நிலையில், மாணவிகள் விடுதிக்கு Wi-fi பிரச்சனையை சரி செய்வதற்காக சென்ற கதிரேசன் என்ற ஊழியர் அங்கிருந்த மாணவி ஒருவரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரின் பேரில் திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், கதிரேசன் மீது 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இதனிடையே, விடுதி வார்டன் மற்றும் கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து மாணவை, மாணவிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலின் பேரில் அங்கு சென்ற திருச்சி மாவட்ட எஸ்.பி.வருண்குமார் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது, மாணவிகளிடம் தரக்குறைவாக பேசிய விடுதி வார்டன் மன்னிப்பு கேட்டார். மேலும், புகாருக்குள்ளான பேராசிரியை, பணியாளர் ஆகியோர் மன்னிப்பு கேட்டதை அடுத்து மாணவர்களின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.


Night
Day