திருச்சி வந்த பயணிக்கு குரங்கம்மை அறிகுறி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சார்ஜாவில் இருந்து திருச்சி வந்த பயணிக்கு குரங்கம்மை நோய் அறிகுறிகள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே தெற்கு பட்டம் என்ற கிராமத்தை சேர்ந்தவர் தினேஷ். இவர், சார்ஜாவில் இருந்து திருச்சி விமான நிலையம் வந்தடைந்த போது அவருக்கு உடற்பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, அவருக்கு குரங்கம்மை நோய்க்கான அறிகுறிகள் இருந்த காரணத்தினால், திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் தனிவார்டில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை அளித்து வருவதாகக் கூறப்படுகிறது.  மேலும் குரங்கு அம்மை பாதிப்பு உள்ளதா என சோதிப்பதற்காக அவரின் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், ரத்த பரிசோதனை முடிவுகள் வந்த பிறகு முழுமையான விவரங்கள் தெரியவரும் என்றும் மருத்துவமனை வட்டாரம் தகவல் தெரிவித்துள்ளது.

Night
Day