தமிழகம்
கே.என் நேரு சகோதரரிடம் வாக்குமூலம் பதிவு செய்யும் ED
திமுக அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ரவிச்சந்திரனை அமலாக்கத் துறை அலுவ?...
திருச்சி மாநகராட்சி கூட்டத்தில் மேயர் உரையாற்றி கொண்டிருந்த போது துணை மேயர் நமட்டு சிரிப்பு சிரித்ததால் சலசலப்பு ஏற்பட்டது. திருச்சி மாநகராட்சியின் மாதாந்திர அவசர மற்றும் சாதாரண கூட்டம் இன்று நடைபெற்றது. அப்போது, கூட்டத்தை தொடங்கி வைத்து பேசிய மேயர் அன்பழகன் ஸ்வச் பாரத் திட்டத்தில் மத்திய அரசால் மாநகராட்சிக்கு வழங்கப்பட்ட வாழ்த்து சான்றிதழை காண்பித்த போது, அருகில் இருந்த துணை மேயர் திவ்யா தனக்கோடி நமட்டு சிரிப்பு சிரித்து கொண்டிருந்தார். அமைச்சர் கே.என். நேரு மற்றும் அன்பில் மகேஷ் இடையே உட்கட்சி மோதல் நிலவி வருகிறது. இந்நிலையில், நேருவின் ஆதரவாளரான மேயரும், அன்பில் மகேஷின் ஆதரவாளரான துணை மேயரும் தனித்தனியே பிரிந்து அரசியல் செய்து வரும் சூழலில், மேயரை சீண்டும் விதமாக துணை மேயர் நமட்டு சிரிப்பு சிரித்தது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
திமுக அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ரவிச்சந்திரனை அமலாக்கத் துறை அலுவ?...
திமுக அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ரவிச்சந்திரனை அமலாக்கத் துறை அலுவ?...