திருச்செந்தூர் நகராட்சி நிர்வாகம் பல மடங்கு வரியை உயர்த்தியதாக குற்றச்சாட்டு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் நகராட்சியில் பல மடங்கு வரி உயர்த்தப்பட்டுள்ளதை கண்டித்து, பொதுமக்கள் வீடுகளில் கருப்பு கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்செந்தூர் பேரூராட்சி கடந்த 2021-ஆம் ஆண்டு நகராட்சியராக தரம் உயர்த்தப்பட்டதை அடுத்து சொத்து வரி, வீட்டுவரி, குடிநீர் வரி ஆகியன பல மடங்கு உயர்த்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்த போதும், நகராட்சி நிர்வாகம் வரியை குறைக்க நடவடிக்கை எடுக்கவில்லை. இதனை கண்டித்து, 18 மற்றும் 21-ம் வார்டுகளில் உள்ள முத்தாரம்மன் கோவில் தெரு, கிருஷ்ணன் கோவில் தெருவைச் சேர்ந்த பொதுமக்கள் தங்கள் வீடுகளில்  கருப்புக்கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Night
Day