திருத்தணி அருகே அரசுப்பேருந்து மீது லாரி மோதி கோர விபத்து - 7 பேர் பலி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே அரசுப் பேருந்தும் டிப்பர் லாரியும் நேருக்கு நேர் மோதிய கோர விபத்தில் 7 பேர் சம்பவ இடத்திலயே உயிரிழந்தனர். விபத்து தொடர்பான பதைபதைக்கும் காட்சி வெளியாகியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே சோளிங்கர் நெடுஞ்சாலையில் கே.ஜி.கண்டிகை பகுதியில் சென்று கொண்டிருந்த அரசு பேருந்தும் மீது எதிரே வந்த டிப்பர் லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இந்த கோர விபத்தில் 7 பேர் பேர் உயிரிழந்தனர். கை கால்கள் துண்டிக்கப்பட்டு உடல் நசுங்கிய நிலையில் படுகாயமடைந்த 20க்கும் மேற்பட்டோர் ஆம்புலன்கள் மூலம் திருத்தணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. சம்பவ இடத்தில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது. நெடுஞ்சாலை விரிவாக்கப் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், குறுகிய சாலையில் இரு வாகனங்களும் நிற்காமல் வந்ததால் இந்த விபத்து நடந்ததாகக் கூறப்படுகிறது. விபத்து தொடர்பான அதிர்ச்சியளிக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

Night
Day