திருத்தணி சார் பதிவாளர் அலுவலகத்தில் மலேசிய பெண் பெட்ரோல் கேனுடன் போராட்டம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சார்பதிவாளர் அலுவலகத்தில் மலேசியாவைச் சேர்ந்த பெண் ஒருவர் இரவு முழுவதும் பெட்ரோல் கேனுடன் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மலேசியாவை சேர்ந்த டத்தோ ராமேஸ்வரி என்பவர், பென்பாடி பகுதியில் உள்ள 2 ஏக்‍கர் நிலத்தை, திருவள்ளூரைச் சேர்ந்த காயத்ரி என்ற பெண்ணிற்கு பொது அதிகாரம் வழங்குவதற்காக திருத்தணி சார்பதிவாளர் அலுவலகத்திற்கு வந்துள்ளார். இவருக்‍கு டோக்‍கனில் குறிப்பிடப்பட்ட நேரத்தையும் கடந்து பதிவு செய்யாமல், அதிகாரிகள் அலைக்கழித்ததுடன் பத்திரப்பதிவு செய்ய லஞ்சம் கேட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த டத்தோ ராமேஸ்வரி, தற்கொலை செய்துகொள்ளப்போவதாகக்கூறி, பெட்ரோல் கேனுடன் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

Night
Day