திருநெல்வேலி மாவட்டத்தில், ராதாபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் புரட்சித்தாய் சின்னம்மா 5-ம் நாள் மக்கள் பயணம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

 தமிழக மக்களின் உரிமைகளை காப்பாற்றிடவும், திமுக தலைமையிலான ஆட்சியின் அவலங்களை மக்களுக்கு தோலுரித்து காட்டிடவும், பெண்ணினத்தின் பாதுகாப்பை பேணிக் காத்திடவும், கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா, திருநெல்வேலி மாவட்டத்தில் 5ஆவது நாளாக இன்று ராதாபுரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் "அம்மாவின் வழியில் மக்கள் பயணத்தை" தொடர்ந்து மேற்கொள்கிறார். 

இதுதொடர்பாக அஇஅதிமுக முகாம் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக மக்களின் உரிமைகளை காப்பாற்றிடவும், திமுக தலைமையிலான ஆட்சியின் அவலங்களை மக்களுக்கு தோலுரித்து காட்டிடவும், பெண்ணினத்தின் பாதுகாப்பை பேணிக் காத்திடவும், கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா, "அம்மாவின் வழியில் மக்கள் பயணத்தை" தொடர்ந்து மேற்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த 13-08-2024 முதல் 17-08-2024 வரை திருநெல்வேலி, பாளையங்கோட்டை, நாங்குநேரி, அம்பாசமுத்திரம் மற்றும் ஆலங்குளம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் "அம்மாவின் வழியில் மக்கள் பயணத்தை" மேற்கொண்டு அங்குள்ள கழகத் தொண்டர்களையும், பொதுமக்களையும் நேரில் சந்தித்த நிலையில், தொடர்ந்து ராதாபுரம் சட்டமன்ற தொகுதியில் கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா, "அம்மாவின் வழியில் மக்கள் பயணத்தை" மேற்கொள்கிறார்.
 
பயணத்தின் ஐந்தாம் நாளான இன்று மாலை 3.30 மணிக்கு ராதாபுரம் சட்டமன்ற தொகுதியில் அம்மாவின் வழியில் மக்கள் பயணத்தை புரட்சித்தாய் சின்னம்மா தொடங்க உள்ளார்.

வள்ளியூர், பணகுடி, பழவூர், கருங்குளம், செட்டிகுளம், கூடங்குளம் ஆகிய பகுதிகளில் புரட்சித்தாய் சின்னம்மா மக்களை சந்திக்க உள்ளார்.

தொடர்ந்து, இடிந்தகரை, விஜயாபதி, உதயத்தூர், ராதாபுரம் ஆகிய பகுதிகளிலும் புரட்சித்தாய் சின்னம்மா மக்களை சந்திக்க உள்ளார்.

கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா மேற்கொள்ளும் "அம்மாவின் வழியில் மக்கள் பயணத்தில்" கழக நிர்வாகிகள், கழக முன்னோடிகள், கழக தொண்டர்கள், புரட்சித்தலைவி அம்மாவின் வழியில் தொடர்ந்து பயணிக்கின்ற அனைத்து தாய்மார்கள், இளம் சமுதாயத்தினர் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் ஜாதி மத பேதமின்றி அனைவரும் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என அஇஅதிமுக முகாம் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.


Night
Day