திருப்பதி-காட்பாடி இரட்டை ரயில் பாதை - மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருப்பதி-காட்பாடி இடையே இரட்டை ரயில் பாதை உள்பட 18 ஆயிரத்து 658 கோடி ரூபாய் செலவில் நான்கு ரயில்வே திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஆயிரத்து 332 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருப்பதி-பகாலா-காட்பாடி இடையிலான 104 கிலோ மீட்டர் ஒற்றை ரயில் பாதையை இரட்டைப் பாதையாக்குவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக கூறினார். 400 கிராமங்கள் மற்றும் 14 லட்சம் மக்களை இணைக்கும் வகையில் இந்த இரட்டை ரயில் பாதை அமையும் என்றும் ஆண்டுதோறும் 40 லட்சம் டன் பொருட்களை கொண்டு செல்லும் திறன் கிடைக்கும் என்றும் குறிப்பிட்டார். அத்துடன் ஒடிசாவில் 2 மற்றும் பஞ்சாப்-ஹரியானாவில் ஒரு ரயில் திட்டங்களுக்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாகத் தெரிவித்தார்.

Night
Day