எழுத்தின் அளவு: அ+ அ- அ
திருப்பதி ஏழுமலையான் திருக்கோவிலில் சொர்க்கவாசல் தரிசனத்திற்கான டோக்கன் வழங்கும் நிகழ்ச்சியில் கூட்ட நெரிசலில் சிக்கி தமிழகத்தை சேர்ந்த பெண் உட்பட 6 பக்தர்கள் உயிரிழந்ததற்கு, அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், திருப்பதி ஏழுமலையான் திருக்கோவிலில் சொர்க்கவாசல் தரிசனத்திற்கான டோக்கன் வழங்கும் நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி தமிழகத்தை சேர்ந்த மல்லிகா என்ற பெண் உள்பட ஆறு பக்தர்கள் உயிரிழந்திருப்பது மிகவும் வேதனை அளிப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், இதில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் 40 நபர்களும் விரைவில் பூரணமாக குணமடைய வேண்டும் என ஆண்டவனை வேண்டுவதாக புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.
திருப்பதி ஏழுமலையான் திருக்கோவிலில் உயிரிழந்தவர்களை இழந்து வாடும் அவர்களுடைய குடும்பத்தினர்களுக்கும், நண்பர்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதாகவும், அன்னார்களது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுவதாகவும் புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.