திருப்பதி மலையில் வழி தவறிச் சென்ற தாய் - கடந்த 2 மாதமாக தேடிவரும் குடும்பத்தினர்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருப்பதி மலையில் வழி தவறிச் சென்ற தாயை இரண்டு மாதமாக மதுரையை சேர்ந்த குடும்பத்தினர் தேடி வருகின்றனர்.

சல்லுப்பாபட்டி கிராமத்தைச் சேர்ந்த 64 வயதான வெள்ளத்தாய் என்பவர், தனது மகன் மாரியப்பன் மற்றும் குடும்பத்தினருடன் கடந்த ஜனவரி மாதம் 10 ஆம் தேதி திருமலைக்கு வந்திருந்தார். சாமி கும்பிட்டு லட்டு பிரசாதம் வாங்க குடும்பத்தினர் சென்றபோது இயற்கை  உபாதைகளுக்காக தனியாக சென்ற வெள்ளத்தாய் பின்னர் திரும்பி வரவில்லை. மாரியப்பன் குடும்பத்தினர் வெள்ளத்தாய் காணாமல் போனதுபற்றி திருமலை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். மேலும் அந்த மூதாட்டியை குடும்பத்தினர் தேடி வருகின்றனர். 

Night
Day