திருப்பத்தூர்: மத்திய அதிவிரைவு படை கமாண்டோ வீரர்கள் ஆலோசனை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருப்பத்தூர் மாவட்டத்தில் சாதிய மோதல்கள் ஏற்படக்கூடிய இடங்களை கண்டறிவது தொடர்பாக கிராமிய காவல் நிலையத்தில் அதிவிரைவு படை கமாண்டோ வீரர்கள் ஆலோசனை நடத்தினர். மத்திய அதிவிரைவு படை கமாண்டர் சஜ்ஜூவ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில், கிராமிய காவல் நிலைய ஆய்வாளர் நிர்மலா பங்கேற்றார். இதில் எந்த பகுதிகள் பதற்றமானது என்பது குறித்தும், சாதிய மோதல்கள் ஏற்படக்கூடிய இடங்கள் எவை என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. மேலும் 70 கமாண்டோ படையினர் பத்து நாட்கள் தங்கி இருந்து கண்காணிக்க உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Night
Day