திருப்பத்தூர்: 100 அடி உயரமுள்ள மலையில் இருந்து தவறி விழுந்த இளைஞர் பலி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே செல்போனை பறித்து சென்ற குரங்கை துரத்தி சென்ற இளைஞர் 100 அடி பள்ளத்தில் தவறி விழுந்து உயிரிழந்தார். கொட்டமிட்டாய் பகுதியை சேர்ந்த தரணிவேல் என்பவர் நண்பருடன் கைலாசகிரி மலைசாலையில் உடற்பயிற்சி செய்ய சென்றுள்ளார். ஓய்வுக்காக அங்கிருந்த படிக்கட்டில் அமர்ந்திருந்தபோது, தரணிவேலின் செல்போனை குரங்கு எடுத்து சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து குரங்கை துரத்தி சென்ற தரணிவேல், 100 உயரமுள்ள மலையில் இருந்து தவறிவிழுந்து உயிரிழந்தார். உடனிருந்த நண்பர் கொடுத்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், இளைஞரின் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Night
Day