திருப்பரங்குன்றம் மலைக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி அளித்து காவல்துறையினர் உத்தரவு..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள காசி விஸ்வநாதர் கோயில் மற்றும் சிக்கந்தர் தர்காவிற்கு  பக்தர்கள் சென்று வழிபடுவதற்கு எந்தவித தடையும் இல்லை என காவல்துறை தெரிவித்துள்ளது

திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் இந்து முன்னணி அமைப்பினர் நேற்று கோவில் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்திருந்ததை தொடர்ந்து, இஸ்லாமியர்கள் மற்றும் இந்துக்களுக்கு இடையே அசாதாரண சூழ்நிலை நிலவக் கூடாது என்பதற்காக மதுரை மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் போராட்டத்துக்கான அனுமதியை பெற்ற இந்து முன்னணி அமைப்பினர், பழங்காநத்தத்தில் போராட்டம் நடத்தினர்.

இந்த சூழலில் திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள காசி விஸ்வநாதர் கோயில் மற்றும் சிக்கந்தர் தர்காவிற்கு  பக்தர்கள் சென்று வழிபடுவதற்கு எந்தவித தடையும் இல்லை என காவல்துறை தெரிவித்துள்ளது. கட்சியாகவோ.. இயக்கமாகவோ செல்வதற்கு மட்டுமே அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.

இதனிடையே திருப்பரங்குன்றத்தில் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட இந்து அமைப்பைச் சேர்ந்த  195 பேர்‌ மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். அவர்கள் போக்குவரத்துக்கு இடையூறு செய்த காரணத்தால் வழக்குப்பதிவு செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Night
Day