திருப்பூர்: உப்பாறு அணைக்கு தண்ணீர் கேட்டு விவசாயிகள் போராட்டம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உப்பாறு அணைக்கு தண்ணீர் கேட்டு விவசாயிகள் நடத்திய போராட்டத்தில் பெண்மணி ஒருவர் சாமி ஆடியதால் பரபரப்பு ஏற்பட்டது. உப்பாறு அணைக்கு திருமூர்த்தி அணையிலிருந்து உபரி நீரைத் திறந்து விட வலியுறுத்தி அப்பகுதி விவசாயிகள் பல கட்டப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதனிடையே மாவட்ட நிர்வாகம் விவசாயிகளை பேச்சுவார்த்தைக்கு அழைத்து கடைசி நேரத்தில் ரத்து செய்துள்ளது. இதனால் ஆவேசமடைந்த 400க்கும் மேற்பட்ட விவசாயிகள், உப்பாறு அணையில் உள்ள சேற்று தண்ணீரில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் நீரில் இறங்க வேண்டாம் என வலியுறுத்தினர். அப்போது சாரதி என்ற பெண்மணிக்கு சாமி வந்து பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு சாபமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Night
Day