திருப்பூர்: உலக மகளிர் தினத்தையொட்டி இலவச மருத்துவ முகாம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

உலக மகளிர் தினத்தையொட்டி திருப்பூர் குமரன் நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில், கல்லீரல் சுருக்கம், கல்லீரல் புற்றுநோய் பாதிப்பு, மார்பக புற்றுநோய், மஞ்சள் காமாலை உள்ளிட்ட நோய்களுக்கு இலவசமாக பரிசோதனைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவர்கள், இந்த மருத்துவ பரிசோதனை முகாமில் 300 நபர்களுக்கு 7 ஆயிரத்து 999 ரூபாய் மதிப்பிலான மருத்துவ பரிசோதனைகள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். மேலும், இந்தியாவில் கல்லீரல் நோய்கள் அதிகரித்து வருவதாகவும், மது பழக்கமே கல்லீரல் பாதிப்புக்கு முக்கிய காரணம் என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

Night
Day