திருப்பூர்: சாலையில் உலா வரும் காட்டு யானைகள் - போக்குவரத்து பாதிப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே சாலையில் உலா வரும் காட்டு யானைகளால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. காமனூத்து பள்ளம், எஸ் பெண்ட், புங்கன் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில், புங்கன் ஓடை பகுதியில் 10க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் குட்டிகளுடன் உலா வந்ததால், மூணார் சாலையில் 
அரை மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர். 

Night
Day