எழுத்தின் அளவு: அ+ அ- அ
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் உள்ள திருராமேஸ்வரம் மங்களநாயகி சமேத ராமநாதசுவாமி கோயிலில் அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா சுவாமி தரிசனம் செய்தார்.
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி சாலையில் அமைந்துள்ள திருராமேஸ்வரம் மங்களநாயகி சமேத ராமநாதசுவாமி கோயிலில் வழிபாடு நடத்துவதற்காக கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா வருகை தந்தார். அப்போது, அப்பகுதி மக்கள் கூடிநின்று புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து, திருக்கோயிலில் நடைபெற்ற சூரிய பூஜையில் கலந்துகொள்வதற்காக வருகை தந்த புரட்சித்தாய் சின்னம்மாவை கோயில் அர்ச்சகர்கள் மற்றும் கோயில் நிர்வாகத்தினர் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். இதனையடுத்து புரட்சித்தாய் சின்னம்மா சூரிய பூஜையில் கலந்துகொண்டு வழிபாடு நடத்தினார்.
இதனையடுத்து, அருள்மிகு ராமநாத சுவாமிக்கும் மங்களநாயகி அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் புரட்சித்தாய் சின்னம்மா பங்கேற்று சுவாமியையும், அம்பாளையும் வழிபட்டு மனமுருக பிரார்த்தனை செய்தார். இதன்பின்னர் கோயில் அர்ச்சகர்கள், புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு அருட்பிரசாதங்களை வழங்கினா்.
இதனைத்தொடர்ந்து திருக்கோவில் நிர்வாகத்தின் சார்பில் புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.
இதனைதொடர்ந்து குழந்தைகள், கோவிலில் பணிபுரியும் பணியாளர்கள், துப்புரவு பணியாளர்கள், உள்ளிட்டோருக்கு புரட்சித்தாய் சின்னம்மா புத்தாடை வழங்கினார். இதனையடுத்து கோயிலில் சாமி தரிசனம் செய்த அனைவருக்கும் புரட்சித்தாய் சின்னம்மா பிரசாதம் வழங்கினார்.