எழுத்தின் அளவு: அ+ அ- அ
திருவண்ணாமலையில் மண் சரிவு ஏற்பட்டு ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் உயிரிழந்தது குறித்து, அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ஃபெஞ்சல் புயலின் தாக்கத்தால் ஏற்பட்ட கனமழையால் திருவண்ணாமலையின் தீபமலை அடிவாரத்தில் மண் சரிவு ஏற்பட்டு ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 நபர்கள் உள்பட மொத்தம் 7 நபர்கள் மண்ணில் புதையுண்ட நிலையில், தற்போது 7 நபர்களும் உயிரற்ற சடலமாக மீட்கப்பட்டு இருப்பது மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் அளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
மண் சரிவு ஏற்பட்டு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்களுக்கும், நண்பர்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும், தெரிவித்துக் கொள்வதுடன், அன்னார்களது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுவதாகவும், புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.