திருவண்ணாமலை மண் சரிவில் 7 பேர் பலி - பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை ஆரத்தழுவி ஆறுதல் தெரிவித்த புரட்சித்தாய் சின்னம்மா

எழுத்தின் அளவு: அ+ அ-

திருவண்ணாமலை வ.உ.சி. நகரில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உட்பட 7 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தை உலுக்கிய நிலையில், சம்பவ இடத்தை அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா நேரில் பார்வையிட்டார். தொடர்ந்து, உறவுகளை இழந்து தவிக்கும் குடும்பத்தினரையும் சந்தித்து புரட்சித்தாய் சின்னம்மா ஆறுதல் கூறினார்.

ஃபெஞ்சல் புயலின் தாக்கத்தால் திருவண்ணாமலை மாவட்டத்தின் பல பகுதிகளிலும் கடந்த 1-ம் தேதி முதல் கனமழை பெய்தது. இதனால் அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள மகா தீபம் ஏற்றும் மலையில் அன்று மாலை திடீரென மண்சரிவு ஏற்பட்டது. பாறைகள் சரிந்து வ.உ.சி.நகர் குடியிருப்புகள் மீது விழுந்தது. இதில், ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உட்பட 7 பேர் மண்ணில் புதையுண்டு பரிதாபமாக உயிரிழந்தனர். நேற்று 5 பேரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், இன்று எஞ்சிய 2 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டன. 

இந்நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டு, நிவாரண உதவிகளை வழங்கிய கழக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா, அங்கிருந்து நேரடியாக திருவண்ணாமலை சென்றார். அங்கு மண்சரிவு ஏற்பட்ட பகுதியை புரட்சித்தாய் சின்னம்மா நேரில் பார்வையிட்டார். மேலும், அருகிலிருந்த கழக நிர்வாகிகளிடம் சம்பம் குறித்து கேட்டறிந்தார்.

தொடர்ந்து, மண்சரிவில் சிக்கி உயிரிழந்த ராஜ்குமார், மீனா, சிறார்கள் கவுதம், வினியா, மகா, தேலிகா, வினோதினி ஆகிய 7 பேரின் குடும்பத்தினரை புரட்சித்தாய் சின்னம்மா சந்தித்து ஆறுதல் கூறினார். தங்களின் அன்பிற்குரிய உறவுகளை இழந்து தவிக்கும் குடும்பத்தினர், புரட்சித்தாய் சின்னம்மாவிடம் கண்ணீர்விட்டு கதறிய காட்சி, கல் நெஞ்சையும் உருக வைத்தது.

குழந்தைகள் உட்பட உறவுகளை இழந்து தவிக்கும் துயரத்தை புரட்சித்தாய் சின்னம்மாவிடம் கூறி உறவினர்கள் கண்ணீர் சிந்தினர். அவர்களின் துயரத்தை பகிர்ந்து கொண்ட புரட்சித்தாய் சின்னம்மா, பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை ஆரத்தழுவி ஆறுதல் தெரிவித்தார்.

மண்சரிவு ஏற்பட்டு ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உட்பட 7 பேர் உயிரிழந்த சம்பவப் பகுதியை அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா பார்வையிட்டதுடன், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறியது அனைவரையும் நெகிழச் செய்துள்ளது.

Night
Day