திருவண்ணாமலை: நரிக்‍குற இளைஞரை தவறாக வழிநடத்திய வனக்‍காவலருக்‍கு கண்டனம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மானை வேட்டையாடச் சொன்ன வனக்காவலரை கண்டித்து திருவண்ணாமலை மாவட்ட வன அலுவலகத்தை நரிக்‍குறவ இன மக்‍கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. திருவண்ணாமலை வனச்சரகத்தைச் சேர்ந்த வன காவலர் சுல்தான் என்பவர் கணந்தம்பூண்டி கிராமத்தில் வசிக்‍கும் நரிக்‍குறவ இனத்தைச் சேர்ந்த தங்கம் என்பவரை, மான் வேட்டையாடியதாகக்‍ கூறி கைது செய்தார். இந்நிலையில், வனக்‍காவலர் சுல்தானே, இளைஞருக்‍கு ஆசை வார்த்தை கூறி மானை வேட்டையாடச் சொன்னதாகவும், மான் தோலுக்‍கு 20 ஆயிரம் ரூபாயும், ஒரு கிலோ மான் கறிக்‍கு 500 ரூபாயும் தருவதாக கூறியதாகவும் நரிக்‍குறவ இனமக்‍கள் குற்றம்சாட்டி வன அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

Night
Day