திருவள்ளுர், ராணிப்பேட்டை, திருச்சி, கோவை மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தென்மேற்கு வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, வலு குறைந்து திசை மாறியதால், 13 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இலங்கை கடலோர பகுதிகளை ஒட்டிய, தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நேற்று முன்தினம் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று பகல் நிலவரப்படி மன்னார் வளைகுடா பகுதியில் நிலவுகிறது. இது படிப்படியாக வலு குறைந்து, தமிழகத்தின் தென் மாவட்டங்களில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக நீடிக்கலாம் என்பதால் தென் மாவட்டங்களில் இன்று பரவலாக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

தென் மாவட்டங்களில் அநேக இடங்கள், வடமாவட்டங்களில் ஒரு சில இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில், இன்று மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, தென்காசி, துாத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில், இன்று ஓரிரு இடங்களில், கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆயவு மைய அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Night
Day