திருவள்ளூர் - கவரப்பேட்டையில் ரயில் விபத்துக்குள்ளான மார்க்கத்தில் மீண்டும் ரயில் சேவை தொடக்கம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருவள்ளூர் மாவட்டம், கவரைப்பேட்டையில் பயணிகள் ரயில் விபத்துக்குள்ளான மார்க்கத்தில் ரயில் சேவை மீண்டும் தொடங்கியது. டெல்லியில் இருந்து வந்த பயணிகள் ரயில் கவரைப்பேட்டை வழியாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு சென்றது. 
கவரப்பேட்டை ரயில் விபத்து தொடர்பாக தண்டவாளத்தில் ஆய்வு மேற்கொண்ட போது கிடைத்த தடயங்களின் அடிப்படையில், ஸ்டேஷன் மாஸ்டர் மற்றும் ரயில்வே ஊழியர்களிடம் என்.ஐ.ஏ எஸ்.பி ஸ்ரீஜித் தலைமையிலான அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். குறிப்பாக சரியாக சிக்னல் கொடுக்கப்பட்டும் ஏன் விபத்து ஏற்பட்டது என்பது குறித்தும், தகவல் தொழில் நுட்ப சாதனங்களில் ஏதேனும் கோளாறா? என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டனர்.
மேலும், ரயில் விபத்து தொடர்பாக அதிகாரிகள் 13 பேருக்கு தெற்கு ரயில்வே சம்மன் அனுப்பிய நிலையில், என்.ஐ.ஏ அதிகாரிகள் விபத்து நடந்த இடத்தை மீண்டும் ஆய்வு செய்தனர். அதன்படி, ஒன்றரை கிலோ மீட்டருக்கு முன்னரே லோகோ பைலடுக்கு சரக்கு ரயில் இருப்பது தெரிந்ததா? என்றும் சிக்னலில் பச்சை விளக்கு எரிய விட்டது மனித கோளாறா? எந்திரக் கோளாறா? என்றும் மேலும் இதுபோன்று ஏற்கனவே 3 சம்பவங்கள் நிகழ்ந்த நிலையில், இது சதி திட்டமா? என்ற பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து தொடர்பாக, 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்

Night
Day