திருவள்ளூர் : ஆக்கிரமிப்பு நிலங்களில் கட்டப்பட்ட வீடுகளை அப்புறப்படுத்தும் பணி மும்முரம்

எழுத்தின் அளவு: அ+ அ-

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே நீதிமன்ற உத்தரவின்படி ஆக்கிரமிப்பு வீடுகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

 ஈக்குவார்பாளையம் மேல்பாக்கம் பகுதியில், காப்புக் காட்டுக்கு சொந்தமான இடத்தில் 60க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி, இன்று 10-க்கும் மேற்பட்ட ஜேசிபி உதவியுடன் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் வருவாய்த்துறையினர் ஈடுபட்டுள்ளனர். இதற்காக மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் கலியன், 3 டிஎஸ்பிகள் தலைமையில் 200க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். இந்நிலையில் வீடுகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகள் மற்றம் போலீசாருடன் அப்பகுதி மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Night
Day