எழுத்தின் அளவு: அ+ அ- அ
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் நகர்மன்ற தலைவரை பணி செய்ய விடாமல் திமுகவினர் பழிவாங்கும் வகையில் செயல்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
கூத்தாநல்லூர் நகர்மன்ற தலைவராக 20-வது வார்டை சேர்ந்த பாத்திமா பஷிரா செயல்பட்டு வருகிறார். நகர்மன்ற தலைவருக்கு எதிராக தி.மு.க.வை சேர்ந்த கவுன்சிலர்கள் சிலர் அவரை பணி செய்ய விடாமல் தடுப்பதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து கூத்தாநல்லூரை சேர்ந்த 60க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நகராட்சி ஆணையர் கிருத்திகா ஜோதியை சந்தித்து மனு அளித்தனர். அதில் கூத்தாநல்லூர் நகர்மன்றத்தின் முதல் பெண் தலைவராக கடந்த 3 ஆண்டுகளாக பொறுப்பு வகித்து வரும் தலைவர் பாத்திமா பஷீரா நகராட்சி பகுதி மக்களுக்கான தேவைகளான குடிநீர், சாலை வசதி, உள்ளிட்ட அடிப்படை வசதிகளை அதிகாரிகள் உள்ளிட்ட அனைவரையும் ஒன்றிணைத்து சிறப்புடன் செயல்பட்டு வருவதாக தெரிவித்தனர். . இந்நிலையில், முறைகேடு புகார்கள் எதுவும் இன்றி சிறப்புடன் செயலாற்றி வரும் பெண் தலைவர் மீது காழ்ப்புணர்ச்சி காரணமாக தி.மு.க.வினர் பணி செய்ய விடாமல் தடுப்பதாக பொதுமக்கள் புகார் மனுவில் தெரிவித்துள்ளனர். எனவே பணி செய்யவிடாமல் தடுக்கும் திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் புகார் மனுவில் கூத்தாநல்லூர் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.