திருவாரூர்: பெருமழையால் பயிர்கள் பாதிக்கப்பட்டதற்கு திமுக அரசு நிவாரணம் தரவில்லை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கடந்த ஜனவரி மாதம் பெய்த பெரு மழையால் சம்பா, தாளடி நெற்பயிர்கள் முற்றாக பாதிக்கப்பட்டதற்கு திமுக அரசு இதுவரை நிவாரணம் அறிவிக்கவில்லை எனக் குற்றம் சாட்டி திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருவாரூர் மாவட்ட மாதாந்திர விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சியர்  சாருஸ்ரீ தலைமையில் நடைபெற்றது. அப்போது பயிர் இழப்பீட்டு நிவாரணம் வழங்காத மத்திய, மாநில அரசுக்கு எதிராக விவசாயிகள் முழக்கங்களை எழுப்பினர். பின்னர், தேர்தல் நடத்தை விதிமுறைகளை காரணம் காட்டி விவசாய குறைதீர்க்கும் நாள் கூட்டத்தை பல மாதங்களுக்கு ஒத்திவைத்தால் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என ஆட்சியரிடம் தெரிவித்தனர். 

Night
Day