திருவாரூர்: லாரி மீது இருசக்கர வாகனம் மோதியதில் இளைஞர் பலி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருவாரூர் மாவட்டம் திருக்குவளையில் லாரியை முந்தி செல்ல முயன்ற போது ஏற்பட்ட விபத்தில் இளைஞர் உயிரிழந்தார். அதங்குடி பகுதியை சேர்ந்த பிருத்திவிராஜ் என்பவர், நேற்று உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்காக கார்குடிக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். திருக்குவளை அருகே சென்றபோது முன்னால் சென்ற லாரி மீது இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இதில் இருசக்கர வாகனத்தை ஓட்டி சென்ற பிருத்திவிராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காயமடைந்த மற்றொரு நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்தின் சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி உள்ளது.

Night
Day