எழுத்தின் அளவு: அ+ அ- அ
விளம்பர திமுக ஆட்சியில் தமிழ்நாட்டின் கடன்சுமை இரு மடங்கு அதிகரித்துள்ளது. விளம்பர திமுக அரசின் திறனற்ற செயல்பாடுகளால் மக்கள் படும் இன்னல்கள் பற்றி விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு....
புரட்சித்தலைவி மாண்புமிகு அம்மா அவர்கள் ஆட்சியில் இருந்த காலத்தில் எல்லாம், இக்கட்டான சூழல்களிலும் மக்கள் மீது கடன் சுமையை திணிக்காமல், ஆக்கப்பூர்வமான திட்டங்களை செயல்படுத்தி வந்தார்.
ஏழைப் பெண்கள் திருமணத்துக்கு தாலிக்கு தங்கம், வறுமையில் வாடும் குடும்பத்துக்கு இலவச கறவை மாடு, அம்மா உணவகம் உள்ளிட்ட பல்வேறு புரட்சிகர திட்டங்களை நடைமுறைப்படுத்தி வெற்றி கண்டார்.
மக்களுக்கான திட்டங்களை தீட்டும் போது பிற்காலத்தில் மக்கள் தலையிலேயே கடன் சுமை விழுந்து விடக்கூடாது என்பதற்காக பார்த்து பார்த்து தேர்தல் வாக்குறுதிகளையும் திட்டங்களையும் அறிவிப்பதில் புரட்சித்தலைவி மாண்புமிகு அம்மா கவனமாக செயல்பட்டார்.
ஆனால் ஆட்சிக்கு வந்தால் போதும் என்ற பேராசையில், ஆயிரத்து எட்டு பொய் வாக்குறுதிகளை அளித்து, எப்படியோ ஆட்சிக் கட்டிலை பிடித்த திமுக, வாக்குறுதிகளை செயல்படுத்த கடன்களை வாங்கி குவித்து வருவது அம்பலமாகி உள்ளது.
அண்மையில் சட்டப்பேரவையில் தாக்கலான நிதி நிலை அறிக்கையில், தமிழ்நாட்டின் கடன் சுமை 8 லட்சத்து 33 ஆயிரத்து 361 கோடி ரூபாயாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
எண்ணற்ற மக்கள் நலன் திட்டங்களை செய்த புரட்சித் தலைவி அம்மாவின் ஆட்சி காலத்தில் கூட தமிழ்நாட்டின் கடன் சுமை கட்டுக்குள் இருந்தது. ஆனால் திமுக ஆட்சிக்கு வந்த மூன்றே ஆண்டுகளில் இரண்டரை லட்சம் கோடி அளவுக்கு கடன் சுமை அதிகரித்துள்ளது. இதனை பாஜக கடுமையாக சாடியுள்ளது.
இது ஒருபுறம் இருக்க, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவதற்கு அரசு ஏதேனும் நடவடிக்கை எடுத்து வருகிறதா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, தமிழ்நாட்டில் கடன் சுமை அதிகமாக உள்ளது என நிதித்துறைச் செயலாளரே வெளிப்படையாக ஒப்புக்கொண்டார்.
நிதி ஆதாரங்களை பெருக்க எவ்வித தொலை நோக்கு சிந்தனைகளும் இல்லாமல், செயலற்று கிடக்கும் திறனற்ற திமுக அரசு, மீதமுள்ள ஈராண்டு ஆட்சியில் இன்னும் எவ்வளவு கடன்களை வாங்கி குவிக்கப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.