தீபாவளிக்கு தனியார் பேருந்துகள் - சின்னம்மா கண்டனம்

எழுத்தின் அளவு: அ+ அ-

தீபாவளி பண்டிகைக்கு மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல தனியார் பேருந்துகளை அரசு ஒப்பந்த பேருந்துகள் என ஸ்டிக்கர் ஒட்டி இயக்க திமுக தலைமையிலான அரசு முடிவெடுத்திருப்பதுமிகவும் கண்டனத்திற்குரியது எனவும், இது இந்த ஆட்சியாளர்களின் நிர்வாக திறமையின்மையை காட்டுவதாகவும் இதன் மூலம் திமுக தலைமையிலான விளம்பர அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்களின் தார்மீக உரிமையை தட்டிப் பறித்திருப்பது யாராலும் மன்னிக்கமுடியாதது என்றும் அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.

இது குறித்து அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், தீபாவளி பண்டிகைக்கு மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல தனியார் பேருந்துகளை அரசு ஒப்பந்த பேருந்துகள் என ஸ்டிக்கர் ஒட்டி இயக்க திமுக தலைமையிலான அரசு முடிவெடுத்திருப்பது மிகவும் கண்டனத்திற்குரியது என தெரிவித்துள்ளார்.

இது இந்த ஆட்சியாளர்களின் நிர்வாக திறமையின்மையை காட்டுவதாகவும், இதன் மூலம் திமுக தலைமையிலான விளம்பர அரசு  போக்குவரத்து கழக ஊழியர்களின் தார்மீக உரிமையை தட்டிப் பறித்திருப்பது யாராலும் மன்னிக்க முடியாதது என கழக பொதுச்செயலாளர் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.

திமுக தலைமையிலான அரசு நான்காம் ஆண்டில் பயணித்து வரும் நிலையில், தமிழகத்திற்கு போதுமான எண்ணிக்கையில் பேருந்து வசதிகளை ஏற்படுத்திட தேவையான எந்தவித ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளையும் எடுக்காமல், இது போன்ற கண்துடைப்பு வேலைகளால் யாருக்கும் எந்த பயனும் இல்லை என அஇஅதிமுக பொதுச்செயலாளர் சின்னம்மா க​ண்டனம் தெரிவித்துள்ளார்.

தனியார் பேருந்துகளை எடுத்து இயக்குவதற்காக ஒரு கிலோ மீட்டருக்கு 51 ரூபாய் என அரசு பணத்தை செலவழித்து, ஒப்பந்த பேருந்து என ஸ்டிக்கர் ஒட்டி தீபாவளி பண்டிகைக்கு இயக்க திட்டமிடுகிறது என்றும், திமுகவினர் எந்த திட்டம் வகுத்தாலும் அதில் ஏதாவது வருமானத்தை எதிர்பார்த்து திட்டமிட்டே செய்வதாகத்தான் மக்கள் கருதுகின்றனர் எனவும் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.

திமுக தலைமையிலான ஆட்சி நான்காம் ஆண்டு முடியும் நிலையில் கூட புதிய பேருந்துகள் வாங்க தேவையான நடவடிக்கைகள் எதையும் எடுக்கவில்லை என சின்னம்மா கூறியுள்ளார். கடந்த ஜூலை மாதம் தென்காசியில் தாம் மக்கள் பயணம் மேற்கொண்டபோது, இந்த அரசு புதிய பேருந்துகள் ஏன் வாங்கவில்லை? என்று தமிழக மக்களின் சார்பாக திமுக அரசுக்கு கேள்வி எழுப்பியதை சின்னம்மா சுட்டிக்‍காட்டியுள்ளார்.

அதன்பிறகு தூக்கத்திலிருந்து விழித்துக்கொண்ட திமுக அரசு புதுக்கோட்டை, திருநெல்வேலி,கன்னியாகுமரி, திருவள்ளூர் உள்ளிட்ட தமிழகத்தின் சில பகுதிகளுக்கு 10 முதல் 20 பேருந்து என்ற சொற்ப எண்ணிக்கையில் கிட்டத்தட்ட 10 அறிவிப்புகளை வெளியிட்டது என சின்னம்மா தெரிவித்துள்ளார்.

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் 8 ஆயிரத்து 182 புதிய பேருந்துகள் வாங்கப்போவதாக ஆணை பிறப்பித்ததோடு சரி. அதனை செயல்படுத்தவில்லை என சுட்டிக்‍காட்டியுள்ள கழக பொதுச்செயலாளர் சின்னம்மா, தமிழகத்தில் வருடத்திற்கு 2 ஆயிரத்திற்கும் அதிகமாக புதிய பேருந்துகள் வாங்க வேண்டிய நிலையில், நான்கு வருடம் முடியும் நிலையில், மொத்தமாக வெறும் 
ஆயிரம் பேருந்துகள் வாங்கினால், அது எப்படி மக்களுக்கு போதுமானதாக இருக்கும் என்று தெரியவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் நாள் ஒன்றுக்கு சுமார் 1 கோடியே 70 லட்சம் பயணிகள் அரசு பேருந்துகளில் பயணிக்கின்றனர் என்றும், மேலும், பண்டிகை காலங்களில் சென்னையிலிருந்து மட்டும் சுமார் 5 முதல் 6 லட்சம் பயணிகள் சொந்த ஊர்களுக்கு செல்லும் நிலையில், தற்போது இயக்கிக் கொண்டிருக்கும் 20 ஆயிரத்து 940 பேருந்துகள் எந்தவிதத்தில் போதுமானதாக இருக்கும் என்பதை திமுக அரசு கொஞ்சம் சிந்தித்து பார்க்க வேண்டும் என புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.

அதிலும் தற்போது இயக்கத்தில் இருக்கும் பேருந்துகளில் சுமார் 60சதவிகிதத்திற்கும் மேல் சரிவர பராமரிப்பு இல்லாமல் இயங்கி கொண்டிருக்கும் பழைய பேருந்துகள் தான். 

அதுவும் ஏதோ தெய்வ அருளால் ஓடிக்கொண்டு இருக்கிறது என சின்னம்மா குறிப்பிட்டுள்ளார். சென்னைக்கு 6 ஆயிரம் முதல் 7 ஆயிரம் பேருந்துகள் தேவைப்படும் நிலையில், இன்றைக்கு வெறும் 4 ஆயிரம் பேருந்துகள்தான் ஓடிக்கொண்டு இருக்கின்றன.

புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ஆட்சியில் கடந்த 2011 முதல் 2016ஆம் ஆண்டு வரை கிட்டத்தட்ட 10 ஆயிரம் புதிய பேருந்துகள் வாங்கப்பட்டன. ஆனால், திமுக ஆட்சியில் புதிய பேருந்துகள் ஏன் வாங்க முடியவில்லை? அதற்கான எந்த செயல் திட்டத்தையும் இந்த ஆட்சியாளர்களால் ஏன் வகுக்க முடியவில்லை? என சின்னம்மா கேள்வி எழுப்பியுள்ளார்.

போக்குவரத்து துறை அமைச்சரோ சட்டசபையில் அறிவிப்பு கொடுப்பதோடு சரி, எதுவும் செய்வதில்லை என்றும், அரசு பேருந்துகளில் விளம்பரத்தின் மூலமும் வருவாய் வரும் நிலையில், மக்களுக்கு எந்த பயனும் இல்லை என​வும் இதற்கு மேல் இந்த விளம்பர அரசு மகளிருக்கு இலவசம் என அறிவித்தார்கள் என்றும், அறிவிப்பு மட்டும் வெளியிட்டால் போதுமா? பேருந்துகள் எங்கே? என்றும் சின்னம்மா கேள்வி எழுப்பியுள்ளார்.

திமுக தலைமையிலான அரசு, பொறுப்பேற்றவுடன் அரசு பேருந்துகளுக்கான  விதிமுறைகளில், 3 வருடம் வரை பயன்படுத்தலாம் என்ற வரையறையை மாற்றி 9 வருடம் என்று திருத்தியது என சுட்டிக்‍காட்டியுள்ள அஇஅதிமுக பொதுச்செயலாளர் சின்னம்மா,
இதன்மூலம் திமுக அரசு புதிய பேருந்துகள் வாங்காமல், பழைய பேருந்துகளை வைத்தே ஆட்சியை முடித்துவிடலாம் என்ற அவர்களின் மக்கள் விரோத எண்ணம் அன்றைக்கே வெட்ட வெளிச்சமாகிவிட்டதாகவும், இது வாக்களித்த மக்களுக்கு திமுகவினர் செய்யும் மிகப்பெரிய துரோகம் ஆகும் என புரட்சித்தாய் சின்னம்மா சாடியுள்ளார். 

தனியார் பேருந்துகள் ஏற்கனவே விடுமுறை காலங்களில் சாமானிய மக்களிடம் அடிக்கும் கட்டண கொள்ளையை தடுக்க முடியாமல் வேடிக்கை பார்க்கும் திமுக தலைமையிலான அரசு, தற்போது தனியார் பேருந்துகளை ஒப்பந்த அடிப்படையில் இயக்க அனுமதிப்பது தனியார்மயத்தை ஊக்குவிக்கின்ற செயலாகும் என அவர் கண்டனம் தெ​ரிவித்துள்ளார். இது போன்ற மக்கள் விரோத மற்றும் தொழிலாளர் விரோத நடவடிக்கைகளை உடனே கைவிட வேண்டும் என அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா திமுக தலைமையிலான அரசைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

Night
Day