தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க கட்டுப்பாடு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தீபாவளி பண்டிகை அன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

தீபாவளி பண்டிகையின்போது  இரண்டு மணிநேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் கடந்த 2018ம் ஆண்டு உத்தரவிட்டது. இதில் எந்த இரண்டு மணி நேரத்தில் பட்டாசு வெடிக்கலாம் என்பதை அந்தந்த மாநில அரசுகளே முடிவு செய்து கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தியது. அதன்படி, காலை 6 முதல் 7 மணி வரையும், இரவு 7  முதல் 8 மணி வரையிலும் பட்டாசுகளை வெடித்துக் கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்தது.

அதன்படி, வரும் 31ம் தேதி தீபாவளி கொண்டாடப்பட உள்ள நிலையில், இந்த ஆண்டும் பட்டாசு வெடிக்க நேரக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. வழக்கம் போல் காலை 6  முதல் 7 மணி வரையும், இரவு 7 முதல் 8 மணி வரையிலும் பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தியுள்ளது. 

மருத்துவமனைகள், வழிபாட்டுத்தலங்கள் மற்றும் அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும் எனக் கூறியுள்ளது. அரசு வழங்கியுள்ள அறிவுறுத்தல்களை பொதுமக்கள் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது. 

Night
Day