தீபாவளியை முன்னிட்டு களைகட்டிய ஆடுகள் விற்பனை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தீபாவளி பண்டிகையையொட்டி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள சந்தைகளில் ஆடுகள் விற்பனை களைகட்டியது. 


தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி வாரசந்தையில் ஆடுகள் விற்பனை களைகட்டியது. சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். தருமபுரி, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் ஆடுகளை வாங்க ஏராளமான வியாபாரிகள் சந்தையில் குவிந்தனர். 5 கோடி ரூபாய் அளவுக்கு ஆடுகள் விற்பனையானதால் விவசாயிகளும், வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.

varient
Night
Day