தீபாவளி பண்டிகை - சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு டிக்கெட் 20 நிமிடங்களில் விற்றுத் தீர்ந்தன

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு டிக்கெட் 20 நிமிடங்களில் விற்று தீர்ந்தன. 

வரும் அக்டோபர் 31ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், பெருநகரங்களில் வேலை பார்க்கும் மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கமாகும். இதையொட்டி, பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. வரும் 29ம் தேதி சென்னை சென்ட்ரலில் இருந்து கன்னியாகுமரிக்கும், நவம்பர் 5-ம் தேதி கன்னியாகுமரியில் இருந்து சென்ட்ரலுக்கும் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இதேபோல், செங்கோட்டை, மங்களூர் உள்ளிட்ட பகுதிகளுக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. இந்நிலையில், ரயில் டிக்கெட் முன்பதிவு காலை 8 மணிக்கு தொடங்கிய நிலையில், 20 நிமிடங்களில் விற்று தீர்ந்தன. 

Night
Day