துணை வேந்தர்களுக்கு மிரட்டல் - முதலமைச்சர் மீது ஆளுநர் குற்றச்சாட்டு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

உதகையில் நடந்த மாநாட்டில் பங்கேற்க கூடாது என துணை வேந்தர்களுக்கு காவல்துறை மூலம் முதலமைச்சர் ஸ்டாலின் மிரட்டல் விடுத்ததாக ஆளுநர் ஆர்.என். ரவி குற்றம் சாட்டியுள்ளார். 

இதுதொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், மாநாட்டில் துணை வேந்தர்களை பங்கேற்கவிடாமல் முதலமைச்சர் ஸ்டாலின் தடுத்த விதம், அவசரநிலையை நினைவூட்டுவதாக சாடியுள்ளார்.

உயர்கல்வித்துறை அமைச்சர் விடுத்த மிரட்டல் பலனளிக்காததால் முதலமைச்சர் காவல்துறையைப் பயன்படுத்தி உள்ளதாகவும், மாநாட்டில் பங்கேற்றால் உயிருக்கு மோசமான விளைவுகள் நேரிடும் என துணை வேந்தர்களுக்கு மிரட்டல் விடப்பட்டுள்ளதாகவும் ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றம்சாட்டியுள்ளார். 

மாநாட்டில் கலந்து கொண்டால் வீடு திரும்ப மாட்டீர்கள் என்று பல்கலைக் கழக துணை வேந்தர்கள் காவல்துறையினரால் அச்சுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி, இங்கு காவல்துறை ராஜ்ஜியமா நடக்கிறது? என கேள்வி எழுப்பி உள்ளார்.

மேலும் கல்வி மாநாட்டில் கலந்து கொள்ள துணை வேந்தர்களுக்கு கல்விச் சுதந்திரம் இல்லையா? என வினவி உள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி, பல்கலைக்கழகங்களின் தரத்தை உயர்த்துவதால் கல்வியில் மாணவர்களை ஆர்வமுள்ளவர்களாக மாற்றும் என்றும் இவை தனது அரசியல் எதிர்காலத்துக்கு அச்சுறுத்தலாக மாறலாம் என முதலமைச்சர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா? என்றும் கேள்வி எழுப்பி உள்ளார்.

Night
Day